Wednesday, August 21, 2019

மீண்டும் 2020 ல் இந்தியா மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி

2020 வல்லரசு இந்தியா


                                                                                                                                                                                 எங்கள் தலைவர் வழிகாட்டி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் இலட்சியக் கனவு பல லட்சம் இளைஞர்களில் லட்சியக்கனவுகள், அனைத்தும் கானல் நீராய் சென்றது. 2020ல் இந்தியா வல்லரசு இதுவே எங்கள் லட்சியமாய் இருந்தது ஆனால் தற்போது 2020 இந்தியா வரலாறு காணாத பொருளாதார பிரச்சினையை சந்திக்க இருக்கின்றது அதன் எதிரொலி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டது உலகப் பொருளாதார வீழ்ச்சி என்பது வேறு, ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது வேறு. 

நான் திருப்பத்தூர் பேசுகிறேன்


மற்ற நகரங்களில் தற்போது காணப்படும் வடக்கு தெற்கு என்ற (பொருளாதார) பாகுபாடு எதிர்காலத்தில் திருப்பத்தூரில்  இருக்கக் கூடாது.

பெங்களூரு, சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு இங்கு உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைமையகமாக அமையவிருக்கும் நான், 

என்னில் உருவாக இருக்கும் தொழில்துறையை பற்றி

திருப்பத்தூரில் அமைக்கப்படவிருக்கும் சிப்காட்டிற்கு, என்னுடைய கருத்து தற்போது நிலை,திருப்பத்தூர்,  நாட்றம்பள்ளி மற்றும் ஆசிரியர் நகர் சுற்றுவட்டாரத்தில் கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திருப்பத்தூரில் ஒரு நிறுவனமும் ,ஆசிரியர் நகரில் மூன்று நிறுவனங்களும் நாட்றம்பள்ளி இரண்டு நிறுவனங்களும். தற்போது திருப்பத்தூர் மற்றும் ஆசிரியர் நகர் நேரடியாக குறைந்தபட்சம் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முக்கியமான தகவல் இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி புதுப்பேட்டை சேர்ந்தவர்கள். சோமலாபுரம் குசுசிலா பாட்டு ஆண்டியப்பனூர் ,குனிச்சி ஆதியூர் சேந்தன்  பெண்கள் தொலைவின் காரணமாக பணிக்கு வர இயலவில்லை, தற்போது நிலையிலேயே வடக்கு மற்றும் தெற்கு என்ற பிரிவின் அறிகுறி தெளிவாகத் தெரிகின்றது.

சிப்காட்  இரண்டாக வடக்கு தெற்கு என்று வழங்கும் பட்சத்தில் நகரின் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தற்போதே களையப்படும். 

இங்கு உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ,தாய்மார்களுக்கும், குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை. தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஊதியம் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றிற்கு 150 முதல் 233வரை , மாதத்திற்கு 4500 முதல் 7000 வரை.
ஆனால் அரசு ஆணைப்படி உழைப்பாளர்களின் குறைந்தபட்ச ஊதியம்

1. டைலர் கிரேட் ஒன்        = 345  முதல்  336 
2. டைலர் கிரேட் 2               = 339   முதல் 329
3. ட்ரிம்மர்                              = 331   முதல்  321
4. செக்கர் கிரேட் 1               = 351   முதல்  340
5. செக்கர் கிரேட் 2               = 345   முதல்  336
6. அயர்ன் மேன் கிரேட் 1  = 345   முதல்   336 
7. அயர்ன் மேன் கிரேட் 2 = 339    முதல்  329
8. பேக்கர்                                = 331    முதல்  321
9. ஹெல்பர்                           = 331    முதல்  321

இத்தனை ஆண்டு காலம் என் மக்கள் கஷ்டப்பட்டது போதும். இனியாவது அனைத்தும் சட்டப்படி நடக்கட்டுமே. இது வரவிருக்கும் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாக அமையும். பொருளாதார ஏற்றத்தாழ்வு இங்கே கலைந்தால் தானே சாத்தியமாகும். இல்லையெனில் ஒருபுறம் வளர் மறுபுறம்  ஏழ்மையும் காணப்படும்.

நாளை என் விவசாயின் குரல் கொண்டு உன்னை சந்திக்கிறேன்.
       



Tuesday, August 20, 2019

செம்மொழித் தமிழ்

தமிழ்மொழி பழகு வலைத்தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்